சீனா அரசின் அதிரடி உத்தரவு!! -மீறுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor III
சீனா அரசின் அதிரடி உத்தரவு!! -மீறுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை-

கொரோனா வைரசின் தாக்கத்தை அடுத்து சீனாவின் பீஜிங் நகரத்துக்கு திரும்பும் மக்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதணை நத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுமுறையில் இருந்து மீண்டும் பீஜிங் இற்கு திரும்புவோர், தாமாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் அல்லது அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் மாத்திரம் ஆயிரத்து 381 பேர் உயிரிழந்துள்ளதுடன், 63 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே 24 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவைத் தவிர ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு