அடுத்தடுத்து 6 இடங்களில் இறக்கி ஏற்றப்பட்டு நரக வேதனை அனுபவிக்கிறோம்..! அரச அதிகாாிகள் ஆளுநாிடம் கண்ணீா் கோாிக்கை..
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் அடுத்தடுத்து 6 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொது பய ணிகள் சேவையை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் அரச ஊழியா்கள், மாணவா்கள் பெரும் அசெ ளகாியங்களை எதிா்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கரிசனை கொண்டு பாதுகாப்புத் தரப்புடன் இணை ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங் களிலிரு ந்து வவுனியா மாவட்டத்துக்கு கடமைக்குச் செல்லும்
அரச உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க என்று காரணம் கூறி யாழ்ப்பாணம் – வவுனியா இடையே ஏ-9 வீதியில் குறிப்பிட்ட இடைவெளியில் 6 இராணுவச் சோதனைச் சாவடிகளால்
காணப்படுகின்றன.பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்போர் அத்தனை சோதனைச் சாவடிகளிலும் இறக்கி சோதனையிடப்படுவதுடன் சிறிது தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சோதனைச் சாவடிகளில் இறக்கிவிடப்பட்டு
சோதனைகள் இடம்பெறுவதால் தினமும் வெளிமாவட்டங்களுக்கு பணிக்குச் சென்று திரும்பும் அரச உத்தியோகத்தர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கரிசனை கொள்ளவேண்டும் என்று
அரச உத்தியோகத்தர்கள் கேட்டுள்ளனர்.