கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சகோதரர்கள் படுகாயம்..!

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சகோதரர்கள் படுகாயம்..!

கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் மாடு மேய்க்க செ ன்ற சகோதரர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதா வது, தர்மபுரம்- பிரமந்தனாறு பகுதியில் நேற்றய தி னம் இரவு இரு சகோதரர்கள் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது வேட்டைக்காரர்கள் கட்டியிருந்த இடிய ன் துப்பாக்கி பொறியில் சிக்கி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் சகோதரர்களை பொதுமக்க ள் மீட்டு வைத்தியசாலையில்

அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Radio