மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் 20 வருடங்கள் பழமையானவையாம்..!

ஆசிரியர் - Editor I
மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் 20 வருடங்கள் பழமையானவையாம்..!

மாங்குளம் பகுதியில் புனா்வாழ்வு வைத்தியசாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட காணியில் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 7ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமைக்கு அமைவாக குறித்த பகுதியில் அகழப்பட்டு எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தது. 

அன்றைய தினமே மாங்குளம் பொலிஸார் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந் தனர். உயர் நீதிமன்ற நீதவான் நேற்றைய தினம் நேரில் சென்று 

பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.நீதவானின் உத்தரவிற்கமைய எலும்புக் கூடுகள் தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன் போது இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 20 வருடம் பழமையானவை என கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு