ஆட்டோ மதிலுடன் மோதி கோர விபத்து..! திருமணமாகி 2 நாட்களேயான புதுமண பெண் பலி, கணவன் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor
ஆட்டோ மதிலுடன் மோதி கோர விபத்து..! திருமணமாகி 2 நாட்களேயான புதுமண பெண் பலி, கணவன் கவலைக்கிடம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் திருமணமாகி இரு நாட்களேயான புதுமண பெண் உயாிழந்துள்ளதுடன், கணவன் படுகாயமடையமடைந்துள்ளாா். 

இந்த சம்பவம் வவுனியா- முருகனுாா் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தா்ஷினி (வயது 25) என்ற பெண்ணே உயிாிழந்துள்ளாா். 

திருமணமாகி 2 நாட்களேயான நிலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது முருகனுாா் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்த நிலையில், அம்யூலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த இருதினங்களிற்கு முன்னரே திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Radio