உதயங்க கைது

ஆசிரியர் - Admin
உதயங்க கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த யு.எல் – 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Radio
×