போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி கையெழுத்து போராட்டம்!

ஆசிரியர் - Admin
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி கையெழுத்து போராட்டம்!

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று மாலை மன்னார் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.     

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் இந்த கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


Radio
×