அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!! -பகிரங்கமாக குற்றம் சாட்டும் பிரியங்கா-

ஆசிரியர் - Editor II
அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!! -பகிரங்கமாக குற்றம் சாட்டும் பிரியங்கா-

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக வேகமாக அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “உ.பி.யில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஃபிரோசாபாத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார்.

சீதாபூரில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அரசு என்ன செய்கிறது? பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனால் அரசு இதற்கு பொறுப்புகூட ஏற்பதில்லை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை இது குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஆத்தியநாத் கூறுகையில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு 218 விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×