பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல்..! குற்றப் புலனாய்வு பிாிவு விசாரணைகளை ஆரம்பித்தது, கலக்கத்தில் பலா்..

ஆசிரியர் - Editor
பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல்..! குற்றப் புலனாய்வு பிாிவு விசாரணைகளை ஆரம்பித்தது, கலக்கத்தில் பலா்..

யாழ்.பல்கலைகழக- கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பி த்திருப்பதாக குற்றப்புலனாய்வு பிாிவு தகவல்கள் கூறுகின்றன. 

குறித்த விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த வாரம் பல்கலைக்கழக நிர்வா கத்திற்கு அறிவித்ததை அடுத்து. காவல்துறையினரும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த நிலையில், 

கணினி குற்றவியல் விசாரணை பிரிவின் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை களை முன்னெடுக்கின்றது.இதற்கமைய, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கைத்தொலைபேசிக ளை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் இதுவரை 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வகுப்புத்தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Radio