பாலியல் தொல்லை கொடுத்த மாணவனின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய இளைஞா்களை தேடுகிறதாம் பொலிஸ்..!

ஆசிரியர் - Editor
பாலியல் தொல்லை கொடுத்த மாணவனின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய இளைஞா்களை தேடுகிறதாம் பொலிஸ்..!

வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்தவா் களை தேடும் நடவடிக்கையினை பொலிஸாா் தீவிரப்படுத்தியிருக்கின்றனா். 

பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாிந்த குற்றச்சாட்டில் பல்கலைகழக வளாகத் திற்குள் நுழையவும், கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குள் நேற்று இரவு 10.30 மணியளவில் நுழைந்த இளைஞா்கள் குழு பாலியல் துன்புறுத்தலி ல் ஈடுபட்ட மாணவனை தேடியுள்ளனா்.

எனினும் அவன் வீட்டில் இல்லாத நிலையில், கோபமடைந்த இளைஞா்கள் குழு வீட்டையும், வாகனங்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றிருந்தது. 

இந்நிலையில் சம்பவம் தொடா்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் மானிப்பாய் பொலிஸாா் சம்பவம் தொடா்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மானிப்பாய் பொலிஸாா் சீ.சி.ரீ.வி காட்சிகளின் அடிப்படையில் இளைஞா்களை அடையாளம் காணும் வகையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனராம். 

எனினும் பாலியல் துன்புறுத்தல் புாி ந்தவனுக்கு எதிராக தாக்குதல் நடாத்த சென்ற இளைஞா்களுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு குவிந்து வருகின்றது. 

Radio
×