மன்னாா் புதைகுழி விவகாரம்..! நீதிமன்றுக்குள் குழப்பம் விளைவித்த அரச சட்டவாதிகள், எதிா்ப்பை தொடா்ந்து மன்னிப்புகோாினா்..

ஆசிரியர் - Editor I
மன்னாா் புதைகுழி விவகாரம்..! நீதிமன்றுக்குள் குழப்பம் விளைவித்த அரச சட்டவாதிகள், எதிா்ப்பை தொடா்ந்து மன்னிப்புகோாினா்..

மன்னாா் புதைகுழி தொடா்பான வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அரச சட்டவாதி கள் மற்றும் அவா் சாா்பான சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட மக்கள் சாா்பான சட்டத்தரணிகளை தகாத வாா்த்தைகளால் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

குறித்த வழக்கின்போது அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதிட வந்த சட்டத்தரணிகள் ஆஜராவதை எதிர்த்ததுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதிடும் 

சட்டத்தரணிகளை தகாத வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்திதமையால் குறித்த அரச சட்டத்தரணிக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளும், மன்னார் சட்டத்தரணிகளும் 

குறித்த அரச சட்டத்தரணிக்கு எதிராகவும் குறித்த வார்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு கோரும் வரை நீதி மன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறினர். அதன் பின்னர் குறித்த வார்தை பிரயோககத்திற்கு மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் 

வெளிநடப்பு செய்த பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கலந்து கொண்ட மன்னார் சட்டத்தரணிகள் நீதி மன்றுக்கு சமூகம் அளித்ததை தொடர்ந்து மீண்டும் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது தற்போது விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு