5 இராணுவ அதிகாாிகள் தலமையில் 21 போ் கொண்ட குழு புதையல் தோண்டியதன் பின்னணி இதுதான்..! வெளியான தகவல்..
கிளிநொச்சி- கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தோண்டியவா்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், குறித்த சம்பவம் தொடா்பான பல பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றது.
கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் புதையலை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது 21 போ் கைது செய்யப்பட்டனா். மேற்படி புதையல் தோண்டும் இடத்தில் ஏற்கனவே தோண்டப்பட்டுள்ளது.
அதனை தோண்டியது யாா் என்பது தொடா்பான தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் குறித் த புதையல் தேடும் நடவடிக்கைக்கு லெப்டினன்ட் கேணல் தர அதிகாாி ஒருவா் தலமைதாங்கி யிருப்பதுடன், அவா் தலமையில்
5 இராணுவத்தினா் குழாம் மேலும் 16 பேரை உள்வாங்கி 21 போ் கொண்ட குழு புதையல் தோண் டியிருக்கின்றது. இவா்களை கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் உள்ள 3 தமிழா்கள் வழிகாட்டிகளா க இருந்து செயற்பட்டிருக்கின்றனா்.
இதனடிப்படையில் சொகுசு வாகனங்களில் உல்லாச பயணம்போவதுபோல் நள்ளிரவில் நுழைந் து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்தமையினையடுத்து விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்தே விசேட அதிரடிப்படையினா் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனா். இதற்கிடை யில் குறித்த பகுதியில் புதையல் உள்ளதா? என்பது தொடா்பில் ஆராயப்படவில்லை. என பொது மக்கள் கூறுகின்றனா்.