சீனா சென்றவர்கள் இந்தியா வர தடை!!

ஆசிரியர் - Editor II
சீனா சென்றவர்கள் இந்தியா வர தடை!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஜனவரி 15ஆம் திகதி அல்லது அதற்கு பிறகு சீனா சென்று வந்த வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்துறை இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதால் விமானம், தரைவழி அல்லது கடல்வழி என எந்த வழியிலும் அவர்கள் இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளான நேபாளம், பூடான்,  பங்களாதேஷ்  மற்றும் மியான்மர் நாட்டினருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் அனைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாக விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Radio
×