காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!!

ஆசிரியர் - Editor II
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நடத்திய பீரங்கி தாக்குதலில் இந்திய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்து வருகிறது.

 இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று மதியம் 3.45 மணியளவில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தினர். 

பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அவர்களுக்கு, இராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

Radio
×