21 பேரை துடிதுடிக்க சுட்டுக் கொலை நபர்!! -படையினரால் சுடப்பட்டார்: 8 பணயக் கைதிகளும் மீட்ப்பு-

ஆசிரியர் - Editor II
21 பேரை துடிதுடிக்க சுட்டுக் கொலை நபர்!! -படையினரால் சுடப்பட்டார்: 8 பணயக் கைதிகளும் மீட்ப்பு-

தாய்லாந்து நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் 21 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த இராணுவ சிப்பாய் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படையினர் குற்றவாளியை கொலை செய்து எட்டு பணயக் கைதிகளை மீட்டுள்ளனர். இந்த பரஸ்பர துப்பாக்கி சூடு காரணமாக சிலர் காயமடைந்தும் உள்ளதாக பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியுள்ளார். 

இளநிலை இராணுவ அதிகாரியான ஜக்ரபந்த் தோம்மா என்ற சந்தேக நபர், நேற்றைய தினம் ஒரு இராணுவ முகாமில் இருந்து ஆயுதங்களைத் திருடுவதற்கு முன்பு தனது மூத்த அதிகாரியைக் கொலை செய்தார்.

பின்னர் நக்கோன் ராட்சாசிமாவில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்ற சந்தேக நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார். அதையடுத்துடன் அந்த காட்சிகளை சமூக ஊடகங்களிலு வெளியிட்டார்.

இதன் பின்னர் அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில்பாதுகாப்புப் படையினர் குறித்த கட்டிடத்தினை சுற்றிவளைத்ததுடன், துப்பாக்கி ஏந்திய நபரை வெளியேற்ற முயன்றனர்.

இதன்போது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையின் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இருந்தபோதிலும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலிருந்து பல பொது மக்களை வெளியேற்றினர். எனினும் பலர் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

இதன் பின்னர் சந்தேக நபரை கைதுசெய்யவும், பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் பல்வேறு முயற்சிகளை படையினர் முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையிலேயே இன்று காலை அந் நாட்டு நேரப்படி 9.30 மணிக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

எனினும் இந்த கொலை எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.

சந்தேக நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் வரை காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Radio