கிளி-தர்ம்புரம் சுற்றிவளைப்பு, 5 இராணுவ அதிகாரிகள், 13 சிங்களவர்கள், 3 தமிழர்கள் அடங்கலாக 21 பேர் கைது..! பொலிஸார் அதிர்ச்சி தகவல்..
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பில் 5 இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் புதையலை தோண்டியதாக சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்றை இன்று அதிகாலை 2.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 13 சிங்களவர்களும், 3 தமிழர்களும் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை தொடர் விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.