காட்டுக்கு சென்ற 36வயதான குடும்பஸ்த்தா் மீது துப்பாக்கி சூடு..! வவுனியா- மகா கச்சக்கொடி கிராமத்தில் இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor
காட்டுக்கு சென்ற 36வயதான குடும்பஸ்த்தா் மீது துப்பாக்கி சூடு..! வவுனியா- மகா கச்சக்கொடி கிராமத்தில் இன்று அதிகாலை சம்பவம்..

மகா கச்சக்கொடி கிராமத்தில் காட்டுக்கு சென்ற நபா் ஒருவா் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் இன்று காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

வேட்டைக்காக சென்றபோது, வேறு வேட்டைக்காரா்களால் பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததிலேயே இவா் படுகாயமடைந்துள்ளாா். 

படுகாயமடைந்தவா் அதே பகுதியை சோ்ந்த கருணாதாஸ (வயது36) என வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. இதனையடுத்து மீட்கப்பட்டவா் வவுனியா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், சம்பவ இடத்தில் பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். 

Radio