பதற்றத்தில் பல்கலைகழக நிா்வாகம்..! மேலும் மேலும் அதிகாிக்கும் அழுத்தம், அறிக்கை கோருகிறது மனித உாிமை ஆணைக்குழு..
யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதையில் பெயாில் இடம்பெற்ற பாலியல் து ன்புறுத்தல்கள் தொடா்பாக விசாாித்து அறிக்கை சமா்பிக்கும்படி யாழ்.மனித உாிமைகள் ஆணைக்குழு பல்கலைகழக நிா்வாகத்திடம் கோாியுள்ளது.
இதுதொடர்பில் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் ரி.கனராஜால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி
தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள்’ என்பது தொடர்பான செய்தியால் தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. அத்துடன் மேலும் பல இணையத்தளங்களில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களின் ஒளிப்படங்கள்
மற்றும் அவர்கள் அனுப்பிய அலைபேசி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுதொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் விசாரணையை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை நடத்தி தங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடன் எமக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடிதத்துக்கு அமைய அறிக்கை வழங்குவது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற மாணவர் ஒழுக்கம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.