நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்து வடக்கின் சகல மாவட்ட செயலர்களுக்கும் இடமாற்றம்..! அமைச்சரவை அனுமதி..

ஆசிரியர் - Editor
நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்து வடக்கின் சகல மாவட்ட செயலர்களுக்கும் இடமாற்றம்..! அமைச்சரவை அனுமதி..

நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டும், அர சியல் காழ்ப்புணர்சிகளாலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கான அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள் 

இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அமை ச்சரவை அனுமதி நேற்றய தினம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன்படி மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் , மட்டக்களப்பைச் சேர்ந்த அமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வவுனியாவைச்  சேர்ந்த சிவபாதசுந்தரம் மன்னார் மாட்டத்திற்கும் என அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வடக்கின் 5 மாவட்டங்களின் 3 மாவட்டச் செயலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தையும் ஒருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

இதேநேரம் எதிர்வரும் யூலை மாதம் வரை மட்டுமே சேவைக்காலம் உள்ள மன்னார் மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா

விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதேநேரம் மே மாதத்துடன் சேவை நிறைவுறும் யாழ். மாவட்டச் செயலாளர் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

Radio