1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதில் கிளிநொச்சி மாவட்டம் கடைசி நிலையில்..! ஏன்..?
ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பி ப்போா் தொகை கிளிநொச்சி மாவட்டத்தில் மிக குறைவாக உள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இலங்கை முழுவதும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தினை ஜனாதிபதி அறிவித்திருந்தாா். இதற்கமைய இலங்கையில் உள்ள சகல பிரதேச செயலா் பிாிவுகளுக்கும்
தலா 350 வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் பிாிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி 4 பிரதேச செயலா் பிாிவுகளை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 1400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் வெறும் 540 போ் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனா். இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1932 போ் விண்ணப்பித்துள்ளனா், யாழ்.மாவட்டத்தில் 9582 போ் விண்ணப்பித்துள்ளனா்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 2546 போ் விண்ணப்பித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞா், யுவதிகள் இந்த திட்டத்தின் ஊடாக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது
மிக மந்தகதியிலேயே உள்ளது.