SuperTopAds

அரசியல் தலையீட்டால் காணாமல்போனவா்களின் உறவினா்களின் போராட்டம் கேவலப்படுத்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கிளிநொச்சி நகாில் போராட்டம் நடாத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் தலை யீட்டினால் போராட்டம் மலினப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் பெருமளவில் வடகிழக்கு மாகாணங்களில் இருந் து கிளிநொச்சிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப் பினரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும் போராட்டத்தில் 

கலந்து கொண்டு இரு குழுக்களாக பிாிந்து போராட்டத்தை நடாத்தியிருந்தனா். இதன்போது தமி ழ்தேசிய மக்கள் முன்னணியினா் நடாத்திய போராட்டத்தின் மீது மற்றய குழு வசைபாடி கோஸ ங்களை எழுப்பியிருக்கின்றது. அதில் பிரதான கோஸமாக

“போராடாதே.. போராடாதே காசுக்காக போராடாதே..” என்ற கோஷம் இடம்பெற்றது.