சீனாவிலிருந்து வந்த விழுப்புரம் மாணவிக்கு கொரோனா அறிகுறி!!
சீனாவில் இருந்து வந்த விழுப்புரம் மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
சீனாவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வைத்தே மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் காய்ச்சல், சளி தொல்லை போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவில் மருத்துவம் படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கடந்த முதலாம் திகதி சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சளி தொல்லை அதிகம் இருந்ததால் உடனடியாக அவரை முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சீனாவில் இருந்து ஊர் திரும்பியவர் என தெரிந்ததும் டாக்டர்கள் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்புக்காக சேர்த்தனர். இதன்படி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமைக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.