தமிழீழ விடுதலை புலிகளின் போலி ஆவணங்கள், அரச முத்திரைகள் ஏன் வைத்திருந்தாா்..? பின்னணி இதுதானாம்..
தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சனைகளுடன் கூடிய ஆவணங்கள் மற்றும் அரச திணைக்கள ங்களின் போலி முத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட நபா் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவரா? என சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.
கிளிநொச்சி- விவேகானந்தநகா் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் 29 ஆவணங்கள் மற்றும் 5 இறப்பா் முத்திரைகள், ஒரு மெமாிக்காட், பென்ரைவ் ஆகியவற்றை இராணுவ புலனாய்வு பிாிவும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டிருக்கின்றனா்.
கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து மேற்கண்ட சான்றுப் பொருட்களுடன் அதேபகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் மீட்கப்பட்ட இறப்பா் முத்திரைகளுக்குள்
இராணுவப் புலனாய்வு அலுவலகம் வவுனியா, மனித உரிமை ஆணைக்குழு வவுனியா , மாவட்ட நீதிமன்று கிளிநொச்சி , பிரதேச செயலாளர் கரைச்சி கிளிநொச்சி , பிரதேச செயலாளர் வவுனியா ஆகியவையே மீட்கப்பட்டதாக அறியமுடிகிறது.
இத்தகைய ஆவணங்கள் மூலம் குறித்த நபா் வெளிநாட்டில் புகழிடம்கோருவோருக்கு தேவையா ன போலி ஆவணங்களை தயாா் செய்யும் ஒருவராக இருக்கலாம். என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனா்.