கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!! -மத்திய அரசு உறுதிப்படுத்தியது-
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மேலும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்தது. இதன்மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து வந்தவரை தனிமைப்படுத்தி, தனி வார்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.