SuperTopAds

நியூசிலந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்!!

ஆசிரியர் - Editor III
நியூசிலந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்!!

அக்லாந்தில் வசித்துவந்த நியூசிலந்தின் முன்னாள் பிரதமர் மைக் மோர் தனது 71 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானர்.

அவர் உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவராக 1999-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

நியூசிலாந்தில் ஒரு நீண்ட அரசியல் வாழ்க்கையை மைக் மோர் கொண்டிருந்தாலும் 1990 ஆம் ஆண்டில் 59 நாட்களுக்கு மட்டுமே பிரதமராக இருந்ததுடன் அதன் பின்னர் நடந்த பொதுத்தேர்தலுக்குப் பின், அவர் எதிர்க்கட்சியின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்குப் பணியாற்றினார்.

இதனை அடுத்து அமெரிக்காவின் நியூசிலாந்தின் தூதுவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அவர் 2015 ஆம் ஆண்டில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மறைவு தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், “தனது வாழ்க்கையை நாட்டுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்த ஒரு பெரிய புத்திசாலியையும், பெரும் மனிதனையும் உலகம் இன்று இழந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.