மன்னார் கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்..! தேடுதல் நடவடிக்கை தீவிரம்..
மன்னார்- சௌத்பார் கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளதுடன்,
குற்றவாளிகளை தேடி விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
மன்னார்-சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று கடற்படையினர் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது,
கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தின் பையை சோதனையிட்டபோது குறித்த பையினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்,
ஒரு தொகுதி டைனமற் வெடி பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.எனினும் இதன்போது சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த கடற்படை,
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.