SuperTopAds

நேர்மையான மக்கள் சேவகன் புறக்கணிக்கபட்டால், நாங்கள் உங்களை புறக்கணிப்போம்..!

ஆசிரியர் - Editor I
நேர்மையான மக்கள் சேவகன் புறக்கணிக்கபட்டால், நாங்கள் உங்களை புறக்கணிப்போம்..!

மக்களோடு மக்களாக இணைந்து பயணிக்கக்குடிய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு, பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படவேண்டும்.

அவ்வாறு பாராளுமன்ற ஆசனத்தை ரவிகரனுக்கு வழங்க மறுத்தால், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு ஆதவு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு முல்லைத்தீவு மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசங்கள் சார்ந்தும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து 31.01 இன்றைய நாள் முல்லைத்தீவு - கள்ளப்பாடு 

பகுதியில் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். இக் கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்திருந்தார்.

இதன்போதே முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில், தமிழரசுக் கட்சித் தலைமைகள் சரியான முறையில் சிந்தித்துச் செயற்படவேண்டும் எனவும், 

தம்மோடு இது தொடர்பில் தலைமைகள் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தாம் ஏற்றுக்கொள்ளாதவர்களை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியினர் வேட்பாளர்களாக நிறுத்தினால் 

கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிப்போம் எனவும் மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.