800 மில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்காத கோட்டா அரசு..! முல்லைத்தீவில் பல அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டது..
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு கொடுப்ப னவு செய்யப்படவேண்டிய 800 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்படாத நிலையில் பல வேலைத் திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கட்டுமான வேலைகள் என்பன இடைநடுவே கைவிடப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இது தொடர்பில் மேலதிக மாவட்ட செயலரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 2019ஆம் ஆண்டு மீள் குடியேற்ற அமைச்சு, கம்பரெலிய,
துரித கிராம அபிவிருத்தித் திட்டம் போன்ற பல்வேறு விசேட திட்டங்களின் கீழ், 800மில்லியனுக்கு அதிகமான நிதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்றுவந்தன. ஆனால் வருட இறுதிப் பகுதியில் கட்டு நிதி பெறுவதில்
ஏற்பட்ட தாமதம் காரணமாக, வேலை கள் இடம்பெற்றும் அந்தக் கொடுப்பனவுகளை வழங்கமுடியாமல் போய்விட்டது.இதனால் கடந்த வருட இறுதியில் குறிப்பிட்ட 800மில்லியன் ரூபாய் நிதி, ஏற்கனவே வேலைகள் நிறைவுற்றும் கொடுப்பனவு செய்யமுடியாமல் இருக்கின்றது
என்ற தகவலை நாங்கள் ஏற்கனவே நிதி அமைச்சிற்கும், திறைசேரிக்கும் அறிவித்திருக்கின்றோம். கொடுப்பனவு செய்யப்படவேண்டிய நிதி விபரங்களையும் கடந்த வருட அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
எவ்வாறாயினும் இவ்வருடம் அதற்குரிய கொடுப்பனவுகளைப் படிப்படியாக வழங்க முடியும் என்பதில் நாம் திடமாக இருக்கின்றோம்.மேலும் இவ்வருடம் சில கட்டுநிதிகள் விடுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஏனைய நிதிகளும் விடுவிக்கப்பட்ட பின்பு கொடுப்பனவுசெய்யவேண்டிய, கட்டுமானங்களு க்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். இதன்மூலம் இடை நடுவே ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்களும் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன்.