SuperTopAds

நிறை மதுபோதையில் இ.போ.ச பேருந்தை ஓட்டிச் சென்று 46 பயணிகளின் உயிருடன் விளையாடிய சாரதி அரச வேலையை இழந்தாா்..!

ஆசிரியர் - Editor I
நிறை மதுபோதையில் இ.போ.ச பேருந்தை ஓட்டிச் சென்று 46 பயணிகளின் உயிருடன் விளையாடிய சாரதி அரச வேலையை இழந்தாா்..!

46 பயணிகளுடன் நிறை மதுபோதையில் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பய ணித்தபோது கைது செய்யப்பட்ட இ.போ.ச சாரதியை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு அ மைச்சா் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளாா். 

இதுதொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலையில் பணியாற்றும் சாரதியையே இவ்வாறு சேவையிலிருந்து நீக்குமாறு 

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர பணித்துள்ளார். யாழ்ப்பாணத்தி லிருந்து கடந்த புதன்கிழமை இரவு 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்பட்ட பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு 

சோதனையிடப்பட்ட போது, சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் சாராயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.

சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. 

46 பயணிகளும் அக்கரைப்பற்றுக்கு பயணிப்பதற்கு கோண்டாவில் சாலையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து வரவழைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.