SuperTopAds

சாந்தபுரம் கிராமத்தில் 4 இடங்களில் பொலிஸார், பொதுமக்கள் முற்றுகை..! தப்பி ஓடிய கசிப்பு வியாபாரிகள்..

ஆசிரியர் - Editor I
சாந்தபுரம் கிராமத்தில் 4 இடங்களில் பொலிஸார், பொதுமக்கள் முற்றுகை..! தப்பி ஓடிய கசிப்பு வியாபாரிகள்..

கிளிநொச்சி- சாந்தபுரம் கிராமத்தில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய சுற்றிவளை ப்பு தேடுதலில் 7 பரல்கள் மற்றும் 80 பைகளில் அமைக்கப்பட்ட கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

கிராமத்தில்  இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிசாருடன் இணைந்து கிராம மக்களும் நேரடியாகவே தேடுதலில் ஈடுபட்டு 4 இடங்களில் இடம்பெற்ற கசிப்பு உற்பத்தியினை முறியடித்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பரிசோதகர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில்   சாந்தபுரம் பொது நோக்கு மண்டபத்தில் அண்மையல்  மேற்கொண்ட கலந்துரையாடலில்  

மேற்படி கிராமத்தில் சட்டவிரோத செயல் இடம்பெறுவதாக சர்ச்சை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சாந்தபுரம் கிராமத்தில் அதிக கசிப்பு உற்பத்தி மற்றும் கசிப்பு பாவனை என்பன இடம்பெறுகின்றன. 

இதனால் அடுத்த கட்டமான சமூக விரோதச் செயல்களும் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இதனை தடுக்க எண்ணுகின்றேன். அதற்கு இப் பகுதி மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என்றார்.

இது தொடர்பில் பதிலளித்த அக் கிராமத்தை சேர்ந்தோர் எமது கிராமத்தில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கூறுகின்றீர்கள். ஆனால் அவ்வாறு விற்பனை செய்யப்படுவதான கசிப்பினை விற்பனையாளர்களிற்கு விநியோகிப்பது யார் எனக கூறவில்லை. 

ஏனெனில் அந்தக் கசிப்பினை கொண்டு வந்து விநியோகிப்பவர்களே பொலிசார் தான். எனப் பதில் குற்றம் சாட்டினர். இதன்போத கசிப்பு விற்பனை செய்தவரை பொலிசார் கை செய்தபோது அவரை கொண்டு செல்ல விடாமலேயே தடுப்பதாகவும் கூறப்படுகின்றதே என பொலிஸ் அதிகாரி வினாவ 

ஆம் கொண்டு வந்து விநியோகிக்கும் பொலிஸாரை பிடியுங்கள் கசிப்பு வராது யாரோ காச்சுவதாக கூறினீர்கள் அங்கும் பொலிசார் வந்து போயினர் பின்பு கசிப்பு காச்சியவரையே பொலிசார் திருமணம் செய்து விட்டனர். இதுதான் எமது நிலமை எனத் தெரிவித்தனர்.

இவற்றினை எதிர்காலத்தில் சரி செய்ய முயற்சிக்கின்றேன். என பொலிஸ் அதிகாரி அன்று பதிலளித்தார். இதன் பிரகாரம் கடந்த இரு நாட்களாக கிராம மக்களும் பொலிசாருமாக கிராமத்தைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படும் காட்டுப் பிரதேசங்கள் 

மற்றும் ஆற்றங்கரையோரங்களில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி மையங்களை இனம்காட்டி பொலிஸார் மூலம் கையகப்படுத்தி வருகின்றனர். இதில்  உற்பத்திக்கான உபகரணங்களும்  கசிப்பும் கைப்பற்றப்பட்டதோடு விற்பனைக்காக 

சொப்பின் பையில் பொதி செய்யப்பட்ட கசிப்பும் கைப்பற்றப்பட்டது.