மன்னார்- திருக்கேதீச்சரம் ஆலய பகுதி புனித பூமியாக அறிவிக்கப்படவுள்ளது..! இந்து- பெளத்த சமய தலைவர்கள் கூட்டாக தீர்மானம்..
மன்னார்- திருக்கேதீச்சரம் சிவன் ஆலயம் மற்றும் அ தனை சூழவுள்ள பகுதிகளை புனித பூமியாக பிரகட னம் செய்ய பெளத்த மற்றும் சைவ சமயங்களின் த லைவர்கள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
இந்து, பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி சர்வதேச மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.
குறித்த மாநாடு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சி.மோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய பாரம்பரிய, பொருளாதார, கல்வி, காணி மற்றும் இன பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் இந்து, பௌத்த பீடங்களை சேர்ந்தவர்கள்
ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் எனவும் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக இலங்கையின் அதி உச்ச பீடமான அரசுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் ஒரு தெளிவான கொள்கையினை எடுக்கவேண்டும் என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.