பிரதேச செயலகத்தை இழுத்து மூடிவிட்டு கலியாண வீட்டுக்கு சென்ற பிரதேச செயலக ஊழியா்கள்..! வீதியில் நின்ற மக்கள்..
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக ஊழியா் ஒருவருக்கு திருமணம் என்பதால் பிரதே ச செயலகத்தை இழுத்து மூடிவிட்டு பிரதேச செயலக ஊழியா்கள் திருமண நிகழ்வுக்கு சென்றதா ல் பிரதேச செயலகத்திற்கு வந்த மக்கள் நடுத்தெருவில் நின்றனா்.
குறிப்பாக குச்சவெளி, திரியாய், கும்புறுப்பிட்டி, வடலிக்குளம், பல்லவக்குளம் போன்ற இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50இற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் குறித்த பிரதேச செயலகத்தில் பணி புரியும் நிலையில் ஒருவர் மாத்திரமே சேவையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச அதிகாரிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக தமது தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.