மோட்டாா் சைக்கிளை பறித்து சென்ற லீசிங் நிறுவன ஊழியா்கள், 1 லட்சம் பணத்தையும் பறித்து விட்டனராம்..! வவுனியாவில் அடிதடி..
மோட்டாா் சைக்கிளை லீசிங் நிறுவன ஊழியா்கள் பறித்துச் சென்ற நிலையில், உருவான வாய் த்தா்க்கம் மோதலாக மாறியதில் லீசிங் நிறுவன ஊழியரையும், மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந் த இளைஞனையும் பொலிஸாா் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனா்.
இன்று பகல் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட முசச்சக்கரவ ண்டிக்குரிய தவணைப்பணத்தை செலுத்துவதற்கு
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தங்க நகை அடகு வைத்து ஒரு இலட்சம் ரூபாவினை நிதி நிறுவனத்திற்கு செலுத்துவதற்கு நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிசென்ற நபர் தான் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளை
குறித்த நிதி நிறுவனத்திற்கு முன்பாக நிறுத்த முற்பட்டபோது குறித்த மோட்டார் சைக்கிளின் பெற்றுக்கொள்ளப்பட்ட தவணைப்பணம் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்து வேறு ஒரு நிதி நிறுவன ஊழியர்களினால் குறித்த மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கையகப்படுத்த சென்ற ஊழியருக்கும் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த நபருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததுடன் முச்சக்கரவண்டிக்கு தவணைப்பணம் செலுத்தவதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்துடன்
மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட்டபோது இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு பொலிசார் அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ள தாகவும் இதனால் அப்பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும்
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.