SuperTopAds

ரஷ்ய சிரிய இராணுவம் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல்!! -மீண்டது மாரெட் அல் நுமன் நகர்-

ஆசிரியர் - Editor III
ரஷ்ய சிரிய இராணுவம் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல்!! -மீண்டது மாரெட் அல் நுமன் நகர்-

சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான மாரெட் அல் நுமனை ரஷ்யப் படைகள் ஆதரவுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

அலெப்போ மற்றும் டமாஸ்கஸை இணைக்கும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மாரெட் அல் நுமன் பகுதியையே சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து சிரிய அரசுப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக சிரியாவில் பல கிராமங்களிலிருந்து தீவிரவாத படைகள் அகற்றப்பட்டுள்ளன. சிரிய மண்ணில் பயங்கரவாதம் இல்லாதவரை இந்தத் தேடுதல் வேட்டை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.எஸ். வீரிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.