SuperTopAds

மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்!! -அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்-

ஆசிரியர் - Editor III
மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்!! -அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்-

மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியலூர் மாவட்டம்,  யுத்தபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.