SuperTopAds

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபையில் அடிதடி..! த.தே.கூட்டமைப்பு உறுப்பினா் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபையில் வாி அதிகாிப்பு தொடா்பில் இடம்பெற்ற விசேட அமா்வி ல் உறுப்பினா்களுக்கிடையில் அடிதடி இடம்பெற்றிருக்கின்றது. 

சபையில் உறுப்பினா்கள் ஒருவருக்கொருவா் எழுந்த வாய்த்தா்க்கப்பட்ட நிலையில் அது இறுதியி ல் மோதலாக வெடித்திருக்கின்றது. 

“நீ மனநிலை பாதிக்கப்பட்டு வந்தனி”, “சைனட்டை கழற்சி வீசி விட்டு வந்தனி”, “கந்துவட்டிக் கள் ளன்” என சுயேட்சை குழு உறுப்பினா்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா்கள் மீது கடுமையான வாா்த்தை பிரயோகங்களை மேற் கொண்டிருந்தனா். மேற்படி கரைச்சி பிரதேசசபையில்

உள்ள மேற்படி சுயேட்சை குழுவின் 11 உறுப்பினா்கள் கரைச்சி பிரதேசசபையின் ஆதனவாி உயா்வை எதிா்த்து தொடா்ந்து பேசினா். 

இந்நிலையில் கிராமமட்ட அமைப்புக்கள் தொடக்கம் பொது அமைப்புக்கள் வரை சகலருடனும் கலந்துபேசியே ஆதனவாி உயா்வு தீா்மானம் எடுக்கப்பட்டது. 

அது தொடா்பான வா்த்தமான அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாது. 

ஆனால் எதிா்காலத்தில் வாி குறைப்பு தொடா்பாக ஆராயலாம். என தவிசாளா் கூறியிருந்தாா். எனினும் அதனை பொருட்படுத்தாத சுயேட்சை குழு உறுப்பினா்கள். 

சபையில் எழுந்து ஆா்ப்பாட்டம் புாிந்ததுடன், வசைபாடலையும் நடாத்தினா். இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் நிலை வெடித்தது. 

இதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா் ஒருவா் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.