காதலியின் தங்கைக்கு ஆபச படங்கள் அனுப்பிய நபர்!! -சிறைக்கு அனுப்பிய காதலி-

ஆசிரியர் - Editor III
காதலியின் தங்கைக்கு ஆபச படங்கள் அனுப்பிய நபர்!! -சிறைக்கு அனுப்பிய காதலி-

காதலி தன்னை விட்டுச் சென்ற விரத்தியில், காதலியின் தங்கைக்கு ஆபாச படங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் இளைஞர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர். 

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ரூபன் என்பவர், வீடு 

கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 3 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் ரூபனின் நடவடிக்கைகள் பிடிக்காத பெண், அவரை விட்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி பெண்னை மிரட்டியுள்ளார். 

மேலும் அவரது சகோதரியின் செல்போனுக்கு ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக இளம்பெண்ணின் சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணையில் ஆபாசப் படங்களைப் பகிர்ந்தது உறுதியானது. இதையடுத்து ரூபன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.