SuperTopAds

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறதா..? புதிய நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்தது..

ஆசிரியர் - Editor I
தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறதா..? புதிய நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்தது..

இலங்கை கடல் எல்லைக்குள் கைது செய்யப்படும் இந்திய மீனவா்களை சட்ட வைத்திய அதிகாாி யின் பிசோதனைக்கு உட்படுத்திய பின்னா் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிரு க்கின்றது. இந்த நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

கைது செய்யப்படும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவதாக குற்றச்சாட்டு க்கள் எழுந்துள்ள நிலையில் கைது செய்யப்படும் தமிழக மீனவா்களை கடற்படையிடமிருந்து பொறுப்பேற்று சட்டவைத்திய அதிகாாியிடம் முற்படுத்தி மருத்துவ பாிசோதனை

நடாத்தியதன் பின்னா் நீதிமன்றில் முற்படுத்தும் நடைமுறையே அமுலுக்கு வந்திருக்கின்றது. நே ற்றய தினம் 11 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடற்படையிடமிருந்து பொறுப் பேற்ற கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களம், 

சட்டவைத்திய அதிகாாியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னா் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.