மாவட்ட செயலக பெண் ஊழியருடன் வெளிநாட்டுக்கு உல்லாச சுற்றுலா சென்ற முன்னாள் மாவட்ட செயலர்..! பதவி பறிபோனதும் அழுதது இதற்கா..? அருமையே..
வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று சென்ற அரச அதிபர் ஒருவர் தற்போதும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனரான இளம் பெண்ணுடன் கனடாவுக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது.
ஒரு காலத்தில் கிளிகளும் நொச்சி மரங்களும் நி றைந்திருந்த அந்த மாவட்டத்தின் அரச அதிபராக கடமையாற்றிய அரச அதிபர் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது கண்ணீரும் கம்பளையுமாக சென்றிருந்தார். அதுவும் இதற்குத்தானாம்.
குறித்த அரச அதிபர் மேற்படி பட்டதாரி பயிலுனரான பெண்ணுக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளாராம். இப்போது கனடா சென்றதற்கு கூட குறித்த பட்டதாரி பயிலுனர் விடுமுறை பெறவில்லையாம்.
அரச ஊழியர் ஒருவர் அனுமதியுடன் விடுமுறை பெறாமல் நாட்டைவிட்டு வெளியேறுவது தவறு. இவ்வாறிருக்க குறித்த சம்பவம் அந்த மாவட்ட செயலகத்தில் கிசு கிசுக்க தொடங்கியிருக்கின்றது.