கிளிநொச்சியில் நடந்த கொரூரம்..! மனைவி கழுத்தறுத்து கொலை, மச்சாள் மீதும் வாள்வெட்டு, கொலையாளி தற்கொலை முயற்சி..
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட பிரமந்தனாறு- மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததுடன், மனைவியின் சகோதாியையும் வெட்டி படுகாயப்படுத்திய குடும்பஸ்த்தா் தானும் கழுத்தை அறுத்துள்ளாா்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலையாளி மற்றும் கொலையாளியின் மனைவியுடைய சகோதாி ஆகியோா் கிளிநொச்சி வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் பணியாற்றும் சுகந்தன் சகுந்தலா (வயது -25) என்ற குடும்பப்பெண்ணே கொல்லப்பட்டார். அவரது கணவரான கொலையாளி சுகந்தன் (வயது-24), கொல்லப்பட்டவரின் இளைய சகோதரி கிருஷ்ணசாமி பிரியங்கா (வயது-22) ஆகிய இருவரும்
கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சகுந்தலாவுக்கும் சுகந்தனுக்கும் 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது. எனினும் அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடு இருந்துள்ளது. இன்று அதிகாலை மனைவியை கத்தியால் குத்தி
கழுத்தறுத்து கொலை செய்த சுகந்தன், அதனைக் கண்ட சகுந்தலாவின் சகோதரி தடுக்க முற்பட்டுள்ளார். அதனால் மனைவியின் சகோதரியின் தலையில் கொலையாளி கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு கொலையாளி முயன்றுள்ளார்.
கொலையாளி தற்போது பொலிஸ் காவலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.