ஒன்றரை வருடமாக சேர்க்கப்பட்ட உண்டியல் பணம் ஒரு இரவில் கொள்ளை..! தேவாலய கதவுகளை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்..

ஆசிரியர் - Editor
ஒன்றரை வருடமாக சேர்க்கப்பட்ட உண்டியல் பணம் ஒரு இரவில் கொள்ளை..! தேவாலய கதவுகளை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்..

மன்னார்- தோட்டவெளி கிராமத்தில் உள்ள மிக பழ மையான தேவாலயத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு களாக திறக்கப்படாமலிருந்த உண்டியலை உடைத் து பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிரு க்கின்றது.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ள து. சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் நிர்வாகம் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்ட உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

காலை ஆலயத்தினுள் சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டதை அவதானித்து ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன்  விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த ஆலயத்தின் உண்டியலில் காணப்பட்ட பணம் 

சுமார் 18 மாதங்களுக்கு மேலக ஆலய நிர்வாகத்தினரினால் எடுக்காத நிலையில் குறித்த உண்டியலில் பெரும் தொகையான பணம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Radio