அரசின் ஆதனவாி சட்டத்தை எதிா்த்து போராட்டம்..! அரச ஊழியரான யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கலந்து கொண்டது எவ்வாறு..?

ஆசிரியர் - Editor I
அரசின் ஆதனவாி சட்டத்தை எதிா்த்து போராட்டம்..! அரச ஊழியரான யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கலந்து கொண்டது எவ்வாறு..?

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபையின் ஆதனவாி உயா்வுக்கு எதிா்ப்பு தொிவித்து வா்த்தகா் ஒருவா் நடாத்திவரும் உணவு தவிா்ப்பு போராட்ட இடத்திற்கு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் வைத்திய கலாநிதி சத்தியமூா்த்தி சென்றுள்ளாா். 

ஆதனவாி அறவீடு செய்யும் விடயம் தனியே பிரதேசசபையின் தனித்தீா்மானம் அல்ல. அது அர சாங்கத்தின் சட்டத்திற்கு அமைவாகவே செய்யப்படுவதாகவும், எவரையும் குறிப்பாக தனி நபா்களை பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல. என கரைச்சி பிரதேசசபை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது. 

மேலும் குறித்த உணவு தவிா்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அரசியல் கட்சி ஒன்று உள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், கரைச்சி பிரதேசசபை தவிசாளராலும் பகிரங்கமாக கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் உணவு தவிா்ப்பு போராட்டம் நடத்திவரும் நபரை நோில் சந்தித்து ஆறுதல் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பாக, பல்வேறு விமா்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு என்ன வேலை? என்பதாகும். 

மேலும் பணிப்பாளா் கிளிநொச்சி மாவட்டத்தை சோ்ந்தவா் என்ற அடிப்படையில் வா்த்தகரை தனிப்பட்ட முறையில் தொிந்து அவரை சந்தித்திருக்கலாம் என கூறப்பட்டாலும், பணிப்பாளா் சந்தித்ததன் பின்னணியிலும் அரசியல் உள்ளதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு