SuperTopAds

நடு வீதியில் மக்களை இறக்கிவிட்டு பேருந்தை பறித்து சென்ற லீசிங் நிறுவன ஊழியர்கள்..! வவுனியா- மன்னார் வீதியில் மக்கள்! பொறுப்பு கூறுவது யார்..?

ஆசிரியர் - Editor I
நடு வீதியில் மக்களை இறக்கிவிட்டு பேருந்தை பறித்து சென்ற லீசிங் நிறுவன ஊழியர்கள்..! வவுனியா- மன்னார் வீதியில் மக்கள்! பொறுப்பு கூறுவது யார்..?

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை இடைநடுவில் லீசிங் நிறுவன ஊழியர்கள் பறித்துச் சென்ற நிலையில் நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து நேற்று காலை பணித்த தனியார் பேருந்து நீண்டதூரம் பயணித்த நிலையில், திடீரென லீசிங் நிறுவன ஊழியர்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த பேருந்துக்கு பல மாதங்களாக லீசிங் கட்டுப்பணம் செலுத்தப்படாமையினால் பேருந்திலிருந்த மக்கள் இறக்கிவிடப்பட்டு பேருந்து பறித்து செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த பேருந்துக்காக மக்கள் வீதியில் நின்று பல அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் லீசிங் நிறுவனத்தின் செயற்பாடு குறித்தும், பேருந்து உரிமையாளரின் செயற்பாடு குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுள்ளனர்.