மணமகளின் தாயுடன் தலைமறைவான மணமகனின் தந்தை
குஜராத் சூரத்தில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தை பகுதியினை சேர்ந்த இருவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பே திருணம் நிச்சயிக்கப்பட்டுள்து.
ஸ்ரேயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணிற்கும் ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இருவரும் நெருங்கி பழகி வந்திருந்தனர். திருமணத்திற்கான நாளும் நெருங்கி வந்தது.
இந்நிலையில் மணமகனின் தந்தையும் மண மகளின் தாயும் பாடசாலை நண்பர்கள் என்பதால் சகஜமாக பேசி பழகி வந்துள்ளனர். பாடசாலை காலங்களில் இருவரும் காதலித்திருந்த போதும், சில சூழ்நிலை காரணமாக அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
இவர்களுடைய காதல் விடயம் அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தெரியாது. இதனால் தமது தாய் தந்தையர்கள் பழகுவது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
திருமணத்திற்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் மணமகனின் தந்தையும் மணமகளின் தாயும் தலைமறைவாகியுள்ளனர். கடந்த 10 நாட்களாக இருவரையும் காணாததால் குடும்ப உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இருவரும் தலைமறைவானதால் பிள்ளைகளின் திருமணம் தடைப்பட்டுள்ளது.