பட்டப்பகல் நடு வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

ஆசிரியர் - Editor III
பட்டப்பகல் நடு வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

திருச்சியில் பட்டப்ப‌கலில்‌ 5 பேர் கொண்ட‌ கும்பல் ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறையூர் மின்‌னப்பன் கோவிலில் முதல் மரியாதை‌‌ பெறுவது தொடர்பாக‌‌ அப்பகுதியைச் சேர்ந்த ஜிம்‌ மணி தரப்பி‌னருக்‌கும், புகழேந்தி தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஜிம் மணி கொ‌லை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்,‌ சிறையில் இருந்த புகழேந்தி கடந்த ‌13 ஆம் திகதி பிணையில் வெளிவந்தார்.

காவல்‌ நிலையத்திற்கு கையெழுத்திட‌ சின்ன செட்டி தெரு வழியாக புகழேந்தி சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை சர‌மாரியாக தாக்கியது. 

இதில், புகழேந்தி நிகழ்விடத்திலேயே பரிதாப‌மாக உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையா‌கக் கொண்டு‌, ஐந்து பேர் கும்பலை காவல்துறை தேடி வருகிறது. மேலும், ஜிம் மணி கொலை‌க்கு ‌பழி வாங்க புகழேந்தி வெட்டிக் கொல்லப்பட்டாரா என்‌ற கோணத்தில் பொலிஸ் விசாரித்து வருகிறது‌‌.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு