கரீபியன் தீவில் பதுங்கிய நித்யானந்தா!! -கைது செய்ய இண்டர்போல் தீவிரம்-
இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்தியானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீசை குஜராத் போலீசார் அணுகி நித்யானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
தற்போது நித்யானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதை பொலிஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை.
நித்யானந்தா புதிய பாஸ்போட்டை பயன்படுத்தி எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறிய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘புளூ கார்னர்‘ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது அனைத்து நகர்வுகளும் முழுமையாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.