இலங்கையில் 1வது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நாளை கிளிநொச்சியில் திறக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் 1வது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நாளை கிளிநொச்சியில் திறக்கப்படுகிறது..

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் நாளை திறந்துவைக்கப்படவுள்ளது.

மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இதனை உருவாக்கின. 

நாளை கிளிநொச்சியில் இந்த நிகழ்வு இடம்பெறும். இந்த திட்டத்தின் மூலம் 12 மெகாவோட் மின்சாரம் பெறப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சி மற்றும் தகவல் பகிர்வு திட்டமாக இந்த திட்டம் பயன்படுத்தப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்திற்கு பயன்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இரு பல்கலைக்கழகங்களும் இந்த திட்டத்தில் செயல்பட்டு வருவதாகவும், 

உலக தூய்மையான எரிசக்தி துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் நோர்வே, அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும், 

தூய்மையான எரிசக்தி ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்க இலங்கைக்கு உதவுவதிலும் ஆர்வமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு