ஆட்டோவை பின்புறமாக மோதி தள்ளிய சொகுசு பேருந்து..! முதியவா் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor
ஆட்டோவை பின்புறமாக மோதி தள்ளிய சொகுசு பேருந்து..! முதியவா் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்..

வவுனியா- ஹொறவப் பொத்தான வீதியில் ஆட்டோ மீது சொகுசு பஸ் மோதியதில் வயோதிபா் ஒருவா் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா சொகுசு பேருந்து மடுகந்தை மயிலங்குளம் வளைவு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக மோதியதில் 

இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த வயோதிபர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio