யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்..

யாழ்.கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மோற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர். 

ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்.பிரதேச செயலாளர்  சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

ஆயினும் மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து தெரிவித்த எதிர்க்புக்களையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திருப்பி அணுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலர் பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்துவதற்கும். 

இது சம்மந்தமாக ஆராய்ந்த தொடர்ந்து அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்பட்ட பொவதில்லலை என்றும் தெரிவித்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு