SuperTopAds

முள்ளிவாய்க்கால் பகுதியில் நிரந்தர படைமுகாம்கள் அமைக்க இராணுவம் திட்டம்..! 2ம் தடவையாகவும் நிராகரித்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் பகுதியில் நிரந்தர படைமுகாம்கள் அமைக்க இராணுவம் திட்டம்..! 2ம் தடவையாகவும் நிராகரித்த மக்கள்..

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் 4 இடங் களில் உள்ள இராணுவ முகாம்களை நிரந்தரமாக்க 96 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் , வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே உள்ள படை முகாம்கள் அமைந்துள்ள 96 ஏக்கர் நிலத்தையும் 

படையினருக்கு வழங்குமாறு கடந்த ஆட்சியில் கோரப்பட்ட சமயம் அதற்கான அனுமதி அப்போது மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 

புதிய அரசின் காலத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 

அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி தலைவர் கனகரட்னம் தலமையில் இடம்பெற்றது.

இதன்போதே   குறித்த விடயம் சமர்ப்பிக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த 96 ஏக்கரில் 10 பேருக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலமும் உள்ளது 

இதனால் குறித்த நிலத்தை வழங்க முடியாது என தீர்மானம் எட்டப்பட்டது.